நாடு முழுவதும் செங்கல் மூலம் வீடு கட்டத் தடை: மத்திய அரசு திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 10, 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் வீடு கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்



நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. களிமண், செம்மண் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் செங்கற்களால் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது. அதற்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களால் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பதற்காக அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய கட்டுமான மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம் செங்கல் கொண்டு கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்வது குறித்து ஆய்வு செய்யக் கோரியுள்ளது. 

மத்திய நகர விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மத்திய பொதுப்பணித்துறை தனது அதிகாரிகளிடம் செங்கலைக் கட்டுமானப் பயன்பாட்டுக்குத் தடை செய்வதன் பாதகம், சாதகம் என்ன என்பது குறித்த கருத்துகளை வரும் 11ஆம் தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. 


மத்திய பொதுப்பணித்துறை என்பது மத்திய அரசு தொடர்பான கட்டிடங்கள், மத்திய சுயாட்சி நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கான கட்டிடங்களைக் கட்டமைத்துக் கொடுக்கும் அமைப்பாகும். 

இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி வீணாகும் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கல்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதன் மூலம் வீணாகும் பொருட்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம், சூழலையும் பாதுகாக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் சாத்தியக் கூறுகள் என்ன கட்டுமானங்களில் செங்கலை தடைவிதிக்கலாமா என்பதை ஆய்வு செய்ய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

Post Top Ad