உதயசந்திரன் IAS வேறு துறைக்கு மாற்றினாலும் பள்ளிக்கல்வி ஆலோசனை கூட்டங்களுக்கு அழைக்கலாம் - ஈகோ பார்க்கக் கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுரை - Asiriyar.Net

Monday, October 8, 2018

உதயசந்திரன் IAS வேறு துறைக்கு மாற்றினாலும் பள்ளிக்கல்வி ஆலோசனை கூட்டங்களுக்கு அழைக்கலாம் - ஈகோ பார்க்கக் கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுரை


தமிழக மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்!*


முன்னதாக புதிய பாடத்திட்டம் தயாரிக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவிலிருந்து யாரையும் நீக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட யாரையும் நீக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


உயர்மட்டக்குழு பணி முடிந்ததால் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். வேறு துறைக்கு மாற்றப்பட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. உதயச்சந்திரனை வேறு துறைக்கு மாற்றினாலும் ஆலோசனை கூட்டங்களுக்கு ஏன் அவரை அழைக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

Post Top Ad