கல்லூரிகளில் 2017-18ம் ஆண்டில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டு, போட்டித் தேர்வுக்கான நாளும் அறிவிக்கப்பட்டது.
தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.