2 மாவட்டத்தில் இன்று விடுமுறை இல்லை- மாவட்ட ஆட்சியர்கள் தகவல் - Asiriyar.Net

Saturday, October 6, 2018

2 மாவட்டத்தில் இன்று விடுமுறை இல்லை- மாவட்ட ஆட்சியர்கள் தகவல்


மாவட்டத்தில்உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் 7-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மிகக் கனமழை இருக்கும் என பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.



இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்கள் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம்இரவு பெய்த தொடர் பழை காரணமாக நேற்று தமிழகத்தில் உள்ளசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.


இந்நிலையில் சென்னையில் இன்று மழை குறைந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில்உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad