ஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் அதிரடி சலுகை! - Asiriyar.Net

Sunday, October 7, 2018

ஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் அதிரடி சலுகை!




ஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் : ரூ.279-க்கு அன்லிமிட்டெட் கால், 4ஜி – 84 நாட்கள் வேலிடிட்டி

வோடஃபோனை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் அனைத்தும் 84 நாட்கள் வேலிடிட்டியை, ரூ. 300-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்தால்தான் வழங்குகின்றன.

ரூ. 279 ரீசார்ஜுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது வோடஃபோன்

டெலிகாம் துறையில் காலடி பதித்த ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. ஜியோ மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையால் போட்டி நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி விடத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், வோடஃபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தறபோது, ரூ. 279-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டியை வோடஃபோன் வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் கால், எஸ்.எம்.எஸ்., வசதியுடன் அன்லிமிட்டெட் 4ஜி/3ஜி டேட்டா வசதியையும் அளிக்கிறது வோடஃபோன்.
சோதனை முயற்சியாக இந்த சேவை கர்நாடகா மற்றும் மும்பையின் சில இடங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை குறிவைத்து தனது ஆஃபரை வோடஃபோன் அறிமுகம் செய்துள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், வோடஃபோனை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் அனைத்தும் 84 நாட்கள் வேலிடிட்டியை, ரூ. 300-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்தால்தான் வழங்குகின்றன. ரூ. 348-க்கு 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ.

Post Top Ad