ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி - Asiriyar.Net

Sunday, October 14, 2018

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி





டேக்வாண்டோவில் சாதனை: 6ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ராஜமாணிக்கம்(16). கடந்த ஆண்டு மாநில அளவில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டியில் 40 முதல் 42 கிலோ எடைபிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த ஆண்டே இதேபிரிவுகளில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுபோன்று மாநில, மண்டல, மாவட்டஅளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.

நடப்பு 2ம் பருவத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால், வழங்கப்பட்டுள்ள 6ம்வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், கடந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதனையாளர்களுக்கான பக்கத்தில் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதிற்குட்பட்ட 40-42கிலோ எடைப்பிரி வில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள ராஜமாணிக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

தான் படிக்கும் காலத்தில் தன்னோடு படிக்கும் மாணவ,மாணவிகள் தன்னைப் பற்றியும் பாடம் படிப்பது மாணவி ராஜமாணிக்கத்திற்கும், அந்த பள்ளிக்கும், ராஜமாணிக்கத்தின் பெற்றோருக்கும் பெருமையாக அமைந்துள்ளது. பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற மாணவி ராஜமாணிகத்திற்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post Top Ad