அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் - Asiriyar.Net

Monday, October 15, 2018

அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்




அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு.

புதுக்கோட்டை,அக்.15: அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசினார்..

புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு திங்கள் கிழமை தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கண்காட்சியினை பார்வையிட்டு வருவாய் மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 19 சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் அவர்கள் வழங்கி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்ட்த்தில் பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளாக ஆக்க ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.ஏற்கனவே நான் பல முறை பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்.பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு தங்களது செயலில் ஈடுபட வேண்டும்.ஒவ்வொரு மாணவனும் தங்களது திறமையை வெளிக்கொணர வேண்டும். அவ்வாறு வெளிக்கொணரும் போது மாணவர்களுக்கு தானாகவே விஞ்ஞான அறிவு கிட்டி விடும்.மேலும் அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை ஆசிரியர்கள் கட்டாயம் நடத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வரவேற்றுப் பேசினார்.

Post Top Ad