இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்! - Asiriyar.Net

Wednesday, October 24, 2018

இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்!





டோக்கியோ : வாரத்திற்கு 5 நாட்கள் இரவில்
குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால், ரூ.42 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் கிரேசி இண்டெர்நேஷனல். திருமணங்களை நடத்தி வைக்கும் இந்நிறுவனம் தனது ஊழியர்கள், வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்கினால், போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆப் மூலம் ஊழியர்களின் தூக்கம் கணக்கிடப்படுகிறது. அதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த அந்நிறுவன அதிகாரி தெரிவித்ததாவது: 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களில் 92 சதவீதம் பேர் இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் அலுவலக வேலைகள் பாதிக்கின்றன. தூக்கத்தின் தேவையை உணர்த்தவே போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

Post Top Ad