4 மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Asiriyar.Net

Friday, October 12, 2018

4 மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு





சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் அதையொத்த பணியிடத்துக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்): கே.அருளரங்கன் (மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்)- முதன்மைக் கல்வி அலுவலர், பெரம்பலூர்.
அ.பாலுமுத்து, (மாவட்டக் கல்வி அலுவலர், கோயம்புத்தூர்)- முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை.
எஸ். ஆஷா கிறிஸ்டி எமரால்ட், (மாவட்டக் கல்வி அலுவலர், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)- செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை.
கே.தங்கவேல், (மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்) - முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்.
இரு அதிகாரிகள் இடமாற்றம்: இதேபோன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்): சே.பாலா, (முதன்மைக் கல்வி அலுவலர், கன்னியாகுமரி)- முதன்மைக் கல்வி அலுவலர், திருநெல்வேலி.
ச.செந்திவேல் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், திருநெல்வேலி- முதன்மைக் கல்வி அலுவலர், கன்னியாகுமரி

Post Top Ad