டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர் - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, August 11, 2020

டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று கூட்டத்தில் அமித் கரே வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommend For You

Post Top Ad