பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை! - Asiriyar.Net

Wednesday, August 19, 2020

பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!






தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இன்று வரை மூடப்பட்டு இருக்கிறது.

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இதன் பேரில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பதாக தெரிகிறது. 


பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தொடக்க பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிப்பது தொடர்கிறது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கி உள்ளது.  1-ம் வகுப்பில் சேர மாணவர்கள் வராதபட்சத்தில் பெற்றோர் தரும் ஆவணத்தின் பேரில் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நேற்று தொடங்கி உள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. 


தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தகவல்களை தமிழக அரசு அளித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Post Top Ad