Flash News : GO : 279 , NHIS - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - (24.06.2020) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 24, 2020

Flash News : GO : 279 , NHIS - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - (24.06.2020)


அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முதலில் ஊரடங்கிற்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  உள்ளதால் அங்கு மட்டும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கிய நிலையில், அரசு ஊழியர்கள் பலருக்கு கொரோனா பரவி வருகிறது. காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களின் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் பரவும் அபாயம் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு வரையறுத்துள்ளது.

மேலும், தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அதற்கான கட்டத்தை தமழக அரசு செலுத்தும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்திலும் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால், அதற்கான தொகையை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக முதற்கட்டமாக ரூ.2.5 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.







Post Top Ad