தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் கருத்து - Asiriyar.Net

Post Top Ad


Friday, June 12, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் கருத்துதமிழகத்தில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவுமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் நீரை திறந்து வைத்தார்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்.... கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். 


அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்; வெளியில் சென்றுவிட்டு திரும்பினால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சென்னையில் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் லாக்டவுன் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானவை. என்னுடைய பெயரில் அப்படி செய்திகளை வெளியிட்டவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதால்தான் கொரோனா தொற்று அதிகமாக ஏற்படுகிறது. பொதுமக்கள் தேவையே இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேன்டும். ஊடகத்தின் வாயிலாக தினந்தோறும் விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களைத் தெரிவித்து வருகிறோம். ஆனால், மக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். 


நான் வரும்போது பலரையும் பார்க்கிறேன். யாருமே முகக்கவசம் அணியவில்லை. விழிப்புணர்வுப் படம் எடுத்து வெளியிட்டோம். அதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். பொதுமக்களுக்குக் குறிப்பாக சென்னை மக்களுக்குக் கோரிக்கை வைக்கிறோம். அரசு அறிவிக்கின்ற நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.


கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு. மேலும் கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.  Recommend For You

Post Top Ad