பள்ளி பாடங்கள்‌ குறைக்கப்படுகிறது அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தகவல்‌ - Asiriyar.Net

Post Top Ad


Thursday, June 11, 2020

பள்ளி பாடங்கள்‌ குறைக்கப்படுகிறது அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தகவல்‌பள்ளி பாடங்கள்‌ குறைக்கப்படுகிறது அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தகவல்‌ ஈரோடு மாவட்டம்‌, நம்‌பியூரில்‌ பள்ளிக்கல்வித்துறை ௮மைச்சர்‌ செங்கோட்டையன்‌ கூறியதாவது: ஜூன்‌ மாதம்‌ 15ம்‌ தேதி நடக்க விருந்த 10ம்‌ வகுப்பு பொதுத்தேர்வுகள்‌, பெற்றோர்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ நலன்‌ கருதி ரத்து செய்யப்‌ பட்டுள்ளது. முதல்வர்‌ அறிவித்தபடி, - மாணவ, மாணவிகளின்‌ காலாண்டு, செங்கோட்டையன்‌ அரையாண்டு தேர்வு மார்க்‌ அடிப்‌ ராரா படையில்‌, மார்க்‌ ஷீட்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ விரைவில்‌ தொடங்கும்‌. 


ஜூன்மாதம்‌ ம்தேதி பள்ளிகள்‌ திறக்கப்படுவது வழக்கம்‌. கரோனாவின்‌ தாக்கம்‌ தீவிரமாக உள்ளதால்‌, பள்ளிகள்‌ திறப்பு நாள்‌ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வைரஸ்‌ தாக்கம்‌ குறைந்த பின்னர்தான்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌. 


பள்ளி திறப்பு தள்ளிப்போவதால்‌, இந்த கல்வியாண்டுக்கான பாடத்‌ திட்டங்கள்‌ குறைக்கப்படும்‌. இதற்காக, 16 பேர்‌ கொண்ட நிபுணர்கள்‌ குழுவினர்‌, ஒவ்வொரு வகுப்புக்கும்‌ ஏற்றார்போல்‌, பாடங்களைக்‌ குறைத்து வருகின்றனர்‌. இதுகுறித்து முதல்வர்‌ பழனிசாமியுடன்‌ கலந்து ஆலோசித்தப்‌ பின்னர்‌, நல்ல முடிவுகள்‌ அறிவிக்கப்படும்‌.
Recommend For You

Post Top Ad