தனியார் பள்ளியில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லையா? - விசாரணை நடத்த CEO உத்தரவு - Asiriyar.Net

Thursday, June 11, 2020

தனியார் பள்ளியில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லையா? - விசாரணை நடத்த CEO உத்தரவு







தனியார்‌ பள்ளியில்‌ 10-ம்‌ வகுப்‌ புக்கு காலாண்டு, அரை யாண்டு தேர்வு நடத்தப்‌ படவில்லையா ? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்‌ளதாக முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்‌. பொதுத்தேர்வு ரத்து கொரோனா பாதிப்பு காரணமாக எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்‌ பட்டு உள்ளது. 


அத்துடன்‌ காலாண்டு மற்‌ றும்‌ அரை யாண்டில்‌ அந்த மாணவர்கள்‌ பெற்ற மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ 80 சதவீத மும்‌, மாணவர்களின்‌ வரு கைப்பதிவேட்டின்‌ அடிப்ப டையில்‌ 20 சதவீத மதிப்‌ பெண்களும்‌ வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டு உள்‌ ளது. இந்த நிலையில்‌ கோவை போத்தனூர்‌ ரெயில்நிலையம்‌ அருகே உள்ள ஒரு தனியார்‌ பள்ளியில்‌ எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. வகுப்பில்‌ 29 மாணவ-மாண விகள்‌ படித்து வருகிறார்கள்‌. இங்கு எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. மாணவ-மாணவிகளுக்கு மாதாந்திர தேர்வுகள்‌ நடத்தப்‌ பட்டதாகவும்‌, காலாண்டு, அரையாண்டுதேர்வுகள்‌ நடத்‌ தவில்லை என்றும்‌ கூறப்படுகி றது. 


மாணல-மாணனிகள்‌ கருத்து இது குறித்து அந்த பள்ளி ல்‌ எஸ்‌.எஸ்‌.எல்‌.சி. படிக்கும்‌ மாணவ-மாணவிகள்‌ கூறிய தாவ (து:- எங்கள்‌ பள்ளியில்‌ காலாண்டு, அரையாண்டு தேர்வுகள்‌ நடத்தவில்லை. வினாத்தாள்களை மட்டும்‌ கொடுத்தனர்‌. இது தொடர்‌ பாக ஆசிரியர்களிடம்‌ கேட்ட தற்கு தேர்வுக்கான பாடங்களை முடிக்கவில்லை என தெரிவித்தனர்‌. 

மேலும்‌, மாணவர்கள்‌ முழு ஆண்டு தேர்வுக்கு தயாராகும்‌ வகை யில்‌ பல கட்டங்களாக தேர்வு கள்‌ நடத்தி உள்ளோம்‌ என தெரிவித்தனர்‌. இந்த நிலையில்‌, அரசு தற்‌ போது காலாண்டு மற்றும்‌ அரையாண்டு தேர்வின்‌ அடிப்படையில்‌ மாணவர்க ளுக்கு தேர்வு மதிப்பெண்‌ அளிப்பதாக தெரிவித்து உள்‌ ளது. எங்கள்‌ பள்ளியில்‌ அந்த தேர்வுகள்‌ நடத்தப்பட வில்லை. எனவே மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்‌ பட்டியல்‌ எப்‌ படி? தயார்‌ செய்யப்போகி றார்கள்‌ என்பது தெரிய வில்லை. 


இதனால்‌ எங்களின்‌ எதிர்காலம்‌ கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள்‌ கூறி னர்‌. விசாரணை நடத்த உத்தரவு இதுகுறித்து மாவட்ட கல்‌ வித்துறை அதிகாரிகளுக்கு தகவல்‌ கிடைத்தது. இதைய டுத்து கல்வித்துறை அதிகாரி கள்‌, பள்ளியின்‌ முதல்வரிடம்‌ தொடர்பு கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள்‌ நடத்தப்பட்டதா ?, 

அவ்வாறு நடத்தி இருந்தால்‌ அவற்றின்‌ விவரங்கள்‌ குறித்த ஆவணங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும்‌ என அறிவுறுத்தி உள்ளதாக தெரி கிறது. - இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறும்போது, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள்‌ பள்ளியில்‌ நடத்தா மல்‌ இருக்க வாய்ப்பு இல்லை. சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தேர்வு நடத்த தேவையான வினாத்தாள்கள்‌ வழங்கப்பட்‌ டன. இருப்பினும்‌ புகார்‌ தொடர்பாக பள்ளிநிர்வாகத்‌ திடம்‌ விசாரணை நடத்த உத்‌ தரவிடப்பட்டு உள்ளது என்‌ றார்‌.



Post Top Ad