"9 லட்சம் மாணவர்கள் 4 லட்சம் ஆசிரியர்கள்" - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கில் காரசார வாதம் - முழு விபரம் - Asiriyar.Net

Post Top Ad


Monday, June 8, 2020

"9 லட்சம் மாணவர்கள் 4 லட்சம் ஆசிரியர்கள்" - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கில் காரசார வாதம் - முழு விபரம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் நீதிமன்றத்தில் ஆஜர்ஆகி அரசு கருத்தை எடுத்து கூறவுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்கிறது...விசாரணை தாமதம் :

காணொலி விசாரணையில் இணையத இணைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக விசாரணை தாமதமடைந்து வருகிறது.


தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது :

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2 வது வாரத்தில் நடத்தலாமா என்பது பற்றி ஆலோசனை செய்து இன்று மாலை 2.30 மணிக்கு தலைமை வழக்கறிஞர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.

முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? - நீதிபதிகள் கேள்வி.

தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் எனவே தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது என தலைமை வழக்கறிஞர் வாதம்.


தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது :

10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் எனவே தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது. திட்டமிட்டபடி தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்,  என தலைமை வழக்கறிஞர் வாதம்.

காலம் செல்ல செல்ல 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் அறிக்கையினை சுட்டிக்காட்டி தலைமை வழக்கறிஞர் வாதம்.

தொடர்ந்து தலைமை வழக்கறிஞர் காணொலி விசாரணையில் விளக்கமளித்து வருகிறார்.


மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு :

மாணவர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என நீதிமன்றம் கேள்வி.


9 லட்சம் மாணவர்கள் நான்கு லட்சம் ஆசிரியர்களின் வாழ்க்கை இது என்று நீதிபதிகள் கருத்து தேர்வை தள்ளி வைத்தால் பாதிப்பு அதிகரிக்கும் என்று அரசு தரப்பில் வாதம் பொதுத் தேர்வை நடத்துவது தான் ஆபத்து அதிகரிக்கும் சூழல் அது பேர் ஆபத்தாக அமையும் அரசு தலைமை வழக்கறிஞர் கருத்து

மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை - தமிழக அரசு தரப்பு வாதம்

* இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் - தமிழக அரசு

* பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் - தமிழக அரசு

* மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு - நீதிபதிகள் கேள்வி

* மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்? - நீதிபதிகள்

* தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

* விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும்

* எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே
சரியான தருணம்

* சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

* இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி
முடித்துவிட்டன

மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது?
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள்

10-ம் வகுப்பு தேர்வு வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Recommend For You

Post Top Ad