10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, June 3, 2020

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கு விவரம் :

தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது நடத்துவது சரிய அல்ல என குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களின் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தற்போது தேர்வு எழுத தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரரின் வழக்கறிஞர் சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அவசர கதியாக ஜூன் 15ம் தேதி தேர்வு வைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் மனநிலை கடுமையாக பாதிக்கும் என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்வு நடைபெறாமல் இருப்பதால் தான் மாணவர்கள் மனநிலை பாதிக்கும்.

தேர்வை எப்படி எதிர்கொள்வது, தேர்வு எப்படி இருக்கும் என மாணவர்களின் மனநிலை மேலும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அரசு முடிவு எடுத்திருக்கும். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் 10ம் வகுப்பு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வரும் 15ம் தேதி
தேர்வு நடத்துவது நல்லது என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Recommend For You

Post Top Ad