அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள்: பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 13, 2019

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள்: பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்


அரசுப்பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் வகைப்பாடு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

தமிழக பள்ளி கல்வித் துறையில் புதிய பாடத்திட்டம் உள்பட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை, கட்டடம் உட்பட முறையான உள்கட்டமைப்புகள் இல்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.


அதனால் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியம் என தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் உதவியுடன் கணிசமான அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்பட தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித்தர கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பள்ளிகள் வகைப்பாடு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த முழு விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இயக்குநரகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் பெறப்பட்டதும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தவும், அதைக் கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad