ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்! - Asiriyar.Net

Saturday, October 5, 2019

ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்!




அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் எவ்விதம் பாடம் நடத்துகிறார்கள் என்பதை ஆண்ட்ராய்டு செயலி மூலம் கண்காணிக்கும் திட்டத்தை
பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.




வகுப்பறைகளில் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறன், கற்றல் திறனை வெளிப்படுத்துதல், மற்றும் மாணவர்களின் கேள்விகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய இந்த செயலி உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளைக் கண்காணிக்க வரும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளையும், மாணவர்களின் கருத்துகளையும் எளிதில் மதிப்பீடு செய்ய இயலும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Post Top Ad