"ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி - Asiriyar.Net

Monday, August 19, 2019

"ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க தலைமை நீதிபதிக்கு அரசு விரைவில் பரிந்துரைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய.கே.தஹில் ரமானி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதித்துறைக்காக கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்.


நீதித்துறையை கணினி மயமாக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் நீதிபதிகள் கடவுளுக்கு சமமானவர்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.


Post Top Ad