ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - Asiriyar.Net

Thursday, October 4, 2018

ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்




🔸🔸சென்னை, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔸🔸சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த பெய்தது. தியாகராய நகர், ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட நகரின் உள்பகுதிகளிலும், வண்டலூர், தாம்பரம் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழையால் குளிர்ச்சியான நிலை காணப்பட்டது

🔸🔸திருப்பூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழையாக உருவெடுத்தது.

🔸🔸திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நேற்று மாலை பரவலாக மழை பெய்துள்ளது.

🔸🔸இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

🔸🔸கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திருசூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏழாம் தேதி வரை ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்ட்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post Top Ad