தண்ணீரில் காந்தி - ஆசிரியர் அசத்தல் - Asiriyar.Net

Tuesday, October 2, 2018

தண்ணீரில் காந்தி - ஆசிரியர் அசத்தல்




திருக்கோவிலுார்‚அரசு பள்ளி ஓவிய ஆசிரியர், தண்ணீரில் மகாத்மா காந்தி படம் வரைந்து அசத்தினார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த சிவனார்தாங்கல் அரசு பள்ளியில், பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார் செல்வம். இவர், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி‚ வண்ண பொடிகளை தண்ணீரில் துாவி, காந்தி படத்தை உருவாக்கினார். இதை பள்ளி மாணவர்கள்‚ ஆசிரியர்கள்‚ பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

Post Top Ad