முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை பற்றிய அறிக்கையை வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, October 24, 2018

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை பற்றிய அறிக்கையை வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு





அனுமதியின்றி உயர்கல்வி படித்த தொடக்க கல்வி ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, இயக்குனர் அறிக்கை கேட்டுள்ளார்.

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் பலர் ஊக்கத் தொகை மற்றும் பதவி உயர்வு பெறும் நோக்கில், தங்கள் கல்வி தகுதியை அதிகரிக்க உயர் கல்வி படிக்கிறார்கள். இதற்கு கல்வி துறையின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் சிலர் இந்த விதியை கடைபிடிப்பதில்லை.

ஒழுங்கு நடவடிக்கை: இவ்வாறு விதிகளை பின்பற்றாமல் உயர் கல்வி படித்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 2014ல் அப்போதைய தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில், 'சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று அனுப்பி வைக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்

Post Top Ad