சத்தான உணவு தேர்வு செய்ய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி - Asiriyar.Net

Wednesday, October 24, 2018

சத்தான உணவு தேர்வு செய்ய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி





பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி, உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது.மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறை உணவு பிரிவு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில்,''சத்தான மற்றும் பாதுகாப்பான உணவை தேர்வு செய்வது, அவற்றை உட்கொள்ளும் முறைகளை, மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, இப்பயிற்சி நடத்தப்பட்டது.இரு நாட்கள் சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளியில் நடக்கும் பயிற்சியில், மாநகராட்சியின், 175 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் சக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். இதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Post Top Ad