தமிழகத்தில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிகொள்ளப்பட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.