நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோவின் புதிய திட்டம் அறிமுகம்.! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 6, 2018

நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோவின் புதிய திட்டம் அறிமுகம்.!




கடந்த சில நாட்களுக்கு முன்பு வோடபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் பின்பு பல சலுகைகளையும் அறிவித்தது, தற்சமயம் அந்நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் நாள் ஒன்றுக்க 5ஜிபி டேட்டா தரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோ வாடிக்கையாளர்கள் தற்சமயம் ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற

சலுகைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ரூ.799-திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.799-க்கு ரீசார்ஜ்:
ஜியோ அறிவித்துள்ள ரூ.799- ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை விரைவில் அந்நிறுவனம் அறிவிக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


ஏர்டெல்:
ஏல்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.799 திட்டதில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச எஸ்எம்எஸ், கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வோடபோன்:
வோடபோன் வழங்கும் ரூ.799-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தை 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற
பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டத்தைப் பார்ப்போம்.


ஜியோ:
ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 91-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Post Top Ad