1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 1, 2018

1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நவம்பர்  27ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும். முன்னதாக 1 லட்சம் ஆசிரியர்கள், வரும் 4ம் தேதி தற்செயல்  விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகின்றனர்.  

குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் மீது தொடர் போராட்டங்கள்  நடத்தி வருகிறோம். ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை அரசு அழைத்துப் பேசவில்லை. 

எனவே வரும் 4ம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம். இந்நிலையில் அரசு அழைத்துப் பேசாமல், ஊதியம் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்துகிறது. இருப்பினும் திட்டமிட்டபடி  போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள். 

மேலும் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும். அரசு அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற  வேண்டும். 

Post Top Ad