200 கல்வி சேனல்கள் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் டாப் 15 அறிவிப்புகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 1, 2022

200 கல்வி சேனல்கள் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் டாப் 15 அறிவிப்புகள்

 




இந்தியாவின் முதல் டிஜிட்டல் கரன்சி, மொபைலில் 5ஜி சேவை, ஒரே நாடு, ஒரே பதிவு, இ பாஸ்போர்ட் என பல முக்கிய திட்டங்கள் 2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை பட்ஜெட் உரையின் முழு விவரம் :


*400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.


*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.


* நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித்தடங்கள், பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகிய 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.


*பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் மூலமாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய இந்த திட்டம் உதவும். 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.


*மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம்,வாத்சல்யா இயக்கம்,  ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


*டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அஞ்சலகஅலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


*மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.*பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் சேவை


*சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்.


*நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள  ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். One Nation, One Registration திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும். நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


*நடப்பாண்டிலேயே 5ஜி தொலைத்தொடர்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


சூழல் பாதுகாப்புடன் 5ஜி தொலைத்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறோம்.


நடப்பாண்டிற்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.


*நாட்டில் சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


*வரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும். இந்திய பண மதிப்பான ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.. டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும்.பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்


*மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கும் மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும்.


*மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க பர்வத்மாலா திட்டம்.எளிதாக தொழில் தொடங்க சூழல் 2.0 திட்டம் துவங்கப்படும்.


*மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கு வருமான வரியில் புதிய சலுகை வழங்கப்படும்




Post Top Ad