பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து தகவல் - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 30, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து தகவல்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு  உள்ள தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 2-ம் தேதி துவங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. கொரோனாஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு மே 27-ம் தேதி துவங்கி ஜூன் 9-ம் தேதி நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன்  தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து இன்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதனடிப்படையில் வரும் ஜூலை 6ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommend For You

Post Top Ad