ஸ்டேட் பேங்க் வெளியிட்ட புது அறிவிப்பு! பதற்றத்தில் வாடிக்கையாளர்கள்! - Asiriyar.Net

Post Top Ad

Sunday, November 3, 2019

ஸ்டேட் பேங்க் வெளியிட்ட புது அறிவிப்பு! பதற்றத்தில் வாடிக்கையாளர்கள்!

நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா வங்கியில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான அரசு ஊழியர்கள், முதியோர்களுக்கான பென்ஷன் தொகை வாங்கி வருபவர்கள் என பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வங்கியா ஸ்டேட் பேங்க் இருந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என அதிரடியாக அறிவித்துள்ளது ஸ்டேட் பேங்க்.மெட்ரோபாலிடன் நகரங்களில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும்.


அதே போன்று வங்கி கணக்கிற்காக காசோலை பெறவும், லாக்கரை பயன்படுத்தவும் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை இருப்பதோடு அதற்கான கட்டணங்களையும் அதிகரித்துள்ளது. \
நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு மாதமும் சேமிப்பு கணக்கில் இருப்பு தொகை சராசரியாக குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரமாக இருக்க வேண்டும். சேமிப்பு கணக்கில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைந்தால் மெட்ரோ நகரில் ரூ.100-ம் கிராமப்புறங்களில் இருக்கும் வங்கிகளில் ரூ.20-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. நகர்ப்புற வங்கிகள் மற்றும் செமி நகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம்.
Recommend For You

Post Top Ad