ஆசிரியர் பணிக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லாது" - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்!! - Asiriyar.Net

Wednesday, November 27, 2019

ஆசிரியர் பணிக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லாது" - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்!!




தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லுபடி ஆகாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஓவிய ஆசிரியர் தேர்வுக்கு கலப்பு திருமண சான்றிதழ் பரிசீலிக்கப்படாதது குறித்து விளக்கம் அளிக்க  ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

       இதனிடையே, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்ததின் படி, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு மட்டுமே கலப்பு திருமண சான்றிதழ் பரிசீலிக்கப்படும் என்றும், ஆசிரியர் உள்ளிட்ட உயர்மட்ட பணிகளுக்கு இது பரிசீலிக்கபடுவதில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad