மாணவர் செயற்களம் வழங்கும் 100 அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான விருதுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 21, 2019

மாணவர் செயற்களம் வழங்கும் 100 அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான விருதுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..

மாணவர் செயற்களம் வழங்கும் 100  அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான  விருதுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..
      திசம்பர்-1 காரைக்குடியில் மாணவர் செயற்களம் நடத்தும் வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பெறவுள்ள மாணவர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க நிறைவு நாள் 25-12-2019.

*மாணவர் செயற்களம்* என்ற அமைப்பு இளைஞர்கள் சமூகப்பணியாற்ற, பொதுநல அக்கறையோடு தொடங்கப்பட்ட மாணவர் இயக்கம். எந்தவிதமான அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் தனித்து, தம்மால் முடிந்த சமூகப்பணியை செய்வதற்கான ஒன்றுகூடல். 

 *பசியில்லா_காரைக்குடி* என்ற பெயரில் தினமும் இளைஞர்கள் ஒன்று கூடி, சாலையோரங்களில் ஆதரவற்று, யாரும் அருகில்கூட செல்லத் தயங்கும் முதியவர்களுக்கும், மனநலம் குன்றியவர்களுக்கும் உணவு வழங்கி வருகிறார்கள்.


*திங்கள்_வெள்ளியில்_உங்கள்_பள்ளியில்* என்ற நிகழ்வில் வாரம்தோறும் அரசுப்பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து, தன்னம்பிக்கை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசி, கலந்துரையாடி அவர்களின் மனதில் ஆழமாகப் பதியுமாறு உரை நிகழ்த்தி வருகிறார்கள். படிக்க வசதி இல்லாத,
 தாய் அல்லது தந்தையை இழந்த(தாய்,தந்தை இருவரையும் இழந்த) மாணவர்களுக்கு தங்களால் முடிந்த வகையில் எழுதுபொருட்கள், நோட்டுப்புத்தகங்கள் வாங்கித்தருகிறார்கள். இலவச உயர்கல்விக்கும் வழிகாட்டி வருகிறார்கள். 


*மாணவர்களுக்கான_மாத_இதழ்*
அரசுப்பள்ளி மாணவர்களின் கலை இலக்கியத் திறமைகளுக்கான களம்.
அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கலை இலக்கியத் திறமைகளை ஊக்குவிக்க மாணவர்களுக்கென்ற தனி மாத இதழ் - மாத இதழில் வரும் படைப்புகள் அத்தனையும் மாணவர்களின் திறமைக்கான அடையாளம். இப்பணியை மாணவர் செயற்களத்தில் இயங்கும் தமிழகக் கல்லூரி மாணவர்கள் பள்ளியில் பயின்ற காலத்திலிருந்தே *'சமூகமே எந்திரி'* என்னும் இதழைச் சிறப்பாக நடத்திவருகிறார்கள்.

இளம் மாணவர்களது அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்னும் நோக்கில் *இளம்_கலாம்_ஆகலாம்* என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.
புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மாணவர்கள் முன்னிலையில் பேசுவார்கள்.

  இவைபோன்ற பல சமூக, கலை-இலக்கியப் பணிகளை முன்னெடுக்கும் மாணவர் செயற்களம் இவ்வாண்டு காரைக்குடியில் வீறுகவியரசர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மண்டலஅளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகளை நடத்தி திசம்பர்-1 காலை காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மாநில இறுதிப்போட்டியை நடத்தவுள்ளது. மொத்த பரிசுத் தொகை 50,000/-
    அன்று மாலை நடைபெறும் விழாவில் கல்வியோடு கலை-இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக- விழிப்புணர்வு நற்பணிகள், வீர-தீரச் செயல்கள் போன்ற தனித்திறன்களில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் 100 அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவும் நிகழ்த்தவுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் சான்றிதழ் நகல்கள் அடங்கிய விபரக் குறிப்புகளை உரிய பள்ளிகளின் தலைமையாசிரியர் ஒப்புதல் கடிதத்துடன் maanavarseyarkalam@gmail என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர்-25 க்குள் அனுப்புக.. 

தொடர்பு முகவரி:
மாணவர் செயற்களம், 10, சத்தியமூர்த்தி நகர், மூன்றாவது வீதி, கணேசபுரம், காரைக்குடி-3.

பேசி: 80728 86188








Post Top Ad