8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! - Asiriyar.Net

Post Top Ad

Friday, October 11, 2019

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..!
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தகுதி : ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு குறைந்தது 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 அன்று 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2019 தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.tnrd.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Recommend For You

Post Top Ad