ஆரஞ்ச் அலர்ட்: அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம் - Asiriyar.Net

Post Top Ad

Sunday, October 20, 2019

ஆரஞ்ச் அலர்ட்: அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலைஉருவாகியுள்ளது. 

இதனால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் கேரள மற்றும் கர்நாடக மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், செங்குன்றம், புழல், மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.Recommend For You

Post Top Ad