8,500 ஆசிரியர்கள் திிண்டாட்டம்:தாமதமாக வழங்கப்படும் ஊதியம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 2, 2019

8,500 ஆசிரியர்கள் திிண்டாட்டம்:தாமதமாக வழங்கப்படும் ஊதியம்

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் தாமதமாக ஊதியம் வழங்குவதால் செலவுக்கு கூட பணமின்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது (நிரந்தர பணியாளர்), அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் என மூன்று தலைப்புகளின் கீழ் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பொது மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து மாதந்தோறும் 31 மற்றும் 1 ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படுகிறது.

பாதிப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாதாமாதம் நிதி ஒதுக்கீடு செய்த பின்பே ஊதியம் வழங்கப்படுகிறது.இது குறித்து கருவூலத்தில் கேட்டால், 'நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதமாகிறது' என்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்க 20 ம் தேதி வரை இழுத்தடிக்கப்படுகிறது. மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள் வீட்டுக்கடன், வங்கி கடன், பால், மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு செலவு, வாகனங்களுக்கு பெட்ரோல் என போக்குவரத்துக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பொது மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர்களை போல் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.


ஒரே மாதிரி ஒதுக்கீடு

உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியது: பொது, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டத்திற்கு ஒரே மாதிரி ஆண்டுநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இடைநிலை கல்வி திட்டத்திற்கு மட்டும் மாதந்தோறும் நிதி ஒதுக்குவதால் ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. 20 நாட்கள் தாமதமாக ஊதியம் வழங்குவது மட்டுமின்றி மாதக்கணக்கில் வழங்கப்படாத நிலையும் உண்டு. இதனால் செலவுக்கு கூட பணமின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad