அஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 21, 2019

அஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது!

அரைக்கால் சட்டையோட பலப்பம் பலகை கையோட

அழுதுனே போனேன் நானும் ஸ்சுலுக்கு

புடிக்காத எடமாட்டம் அம்புட்டு பயம்
தாய்ப்பால் மறந்து தாய்மொழி கத்துக்க கொத்தா புடிச்சி என இங்க கொண்டாந்து சேத்தாங்க


என்னைய மாதிரியே அம்புட்டு பயலுவளும் அழுது பொறண்ட இடந்தான் அந்த ஒன்னாப்பு பள்ளிக்கூடம்

போக போக புடிச்சிப்போச்சி டீச்சரம்மா கத சொல்லி சிரிச்சி பேசி முட்டாயா இனிச்சிப்போச்சி ஒன்னாங்கிளாசு

முனியன் பால்பாண்டி கோமதி கவுசல்யானு சிநேகித பந்தம்
ஆடுபுலி ஆட்டந்தொடங்கி மண்வாசம் மாறாத இனிமை பள்ளியாச்சு எங்க பள்ளி

கூட்ட கழிக்க வகுக்க பெருக்கனு துளிர் விட்டுச்சு கணக்கு
வராத இங்கிலீசும் குட்மார்னிங் குட்ஈவ்னிங்குன்னு மனசுல வந்து நின்னுச்சு

பாய் நடுவால டீச்சரம்மா உக்காந்து அட்டபடம் காட்டி காட்டி அச்சத்த போக்குனாங்க

கிரேடு கொண்டாந்து பெயில மறக்க வச்சாங்க
என்னமோ ஏபிஎல்லு சிசிஇனு வகை வகையா படிச்சோம்

ரெண்டு பருவம் போன பெறவு குண்டு ஒன்ன போட்டாக்கா சிண்டு சிறுங்க மெரண்டு போவாதா?
என் பிரண்டு பாசாக பெயிலா நா போனாக்கா ஊர் ஒலகம் என்னைய ஏசாதா?

அஞ்சாவதுல பொதுத்தேர்வா?
பூக்காத மொட்ட கையவச்சு விரிச்சாக்கா அறிவு வாசம் தான் வருமா
கல்விப்புதுமை தான் ஒத்துக்கறோம் ஆனா எங்களுக்கு பொதுத்தேர்வு தகுமா?


ஐயா சாமிகளா
நாலும் அறிஞ்சவங்களா
ஏழைபாழைக படிக்கத்தான் பள்ளி
எங்க கனவுல வேண்டாமுங்க கொள்ளி
தயவு செஞ்சு உங்க முடிவ வைய்யுங்கைய்யா கொஞ்சம் தள்ளி

அஞ்சாவதோட நின்னான்னு வரலாறு வேணாம்
எங்க சிறகும் வானம் அளக்க வேணும்

கொள்கை முடிவுனு சொல்லிட்டீங்க
இந்த குட்டிப்பய மனபயத்தையும் கொஞ்சம் யோசிங்க

இப்படிக்கு,
அஞ்சாங்கிளாசு
அறிவழகன்

Post Top Ad