தொப்பை வைத்திருந்தால் ரத்த அழுத்தம் BPஅதிகரிக்கும்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 24, 2018

தொப்பை வைத்திருந்தால் ரத்த அழுத்தம் BPஅதிகரிக்கும்!




ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு
அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.


இவ்வாறு ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால்அது பல்வேறு தீவிர உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும்.

இத்தகைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும் சில செயல்களை செய்து வந்தால் விரைவில் உயர் ரத்த அழுத்ததை குறைக்கலாம்.

உப்பு குறைப்பு

உப்பு தான் உயர் இரத்த அழுத்தம் வர முக்கிய காரணமாக உள்ள ஒரு பொருள் ஆகும். எனவே உப்பு அதிகம் உள்ள எந்தப் பொருளையும் தொடக்கூடாது.

தொப்பை

அளவுக்கு அதிகமான எடையை சதையை இடுப்பில் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே அதிகமாக தொப்பை போடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உடல் எடை

தொப்பை மட்டுமல்ல உடல் எடை கூடினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் அளவுக்கு மீறி உடல்எடை உள்ளவர்கள். அதனால் உடல் எடையில் கவனம் வேண்டும்.

மன அழுத்தம்

கவலை, பதற்றம், பயம், மன அழுத்தம், மன இறுக்ம் இருந்தால் கண்டிப்பாக பி.பி. எகிறும். யோகா, தியானம், மூச்சு உள்வாங்கி வெளியிடுதல் போன்ற பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும்.

புகை பிடித்தல் கூடாது

புகை பிடிப்பது ரத்த அழுத்தம் இன்னொரு பெரிய எதிரி. ஒரு சிகரெட் புகைத்தாலே 10 மி.மீ. வரை ரத்த அழுத்தம் உயரும்.

மது அருந்துதல்

ஒரு நாளைக்கு தேவையான அளவு மட்டும் மது சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறைகிறது என்கிறார்கள். ஆனால் அதுவே அளவை மீறினால் உயிருக்கே ஆபத்துதான்.

உடற்பயிற்சி

நடக்கும்பொழுது பாதம் முழுவதும் ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை வெயிலுக்கு முன்பு நடப்பது நல்லது. எனவே அதிகாலை நடைப்பயிற்சி 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை சிறிது உடற்பயிற்சி செய்துவர வேண்டும்.

Post Top Ad