இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 21, 2018

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்!

குரு அருள் இருந்தால் திருவருள் என்பது தொன்மொழி. குருவுக்கு உகந்த வியாழனன்று இந்த தலங்களுக்கெல்லாம் சென்று அல்லது இந்த தளங்களில் ஒன்றுக்காவது தொடர்ந்து சென்றுவர உங்கள் வாழ்வில் வசந்தம்தான். இந்த வருடம் 2018 குருபெயர்ச்சி அதுவும் வியாழக்கிழமை அன்று தொடங்கும் பூசைகள் பரிகாரங்களுக்கான நேரம் முதலிய அனைத்து தகவல்களையும் காண்போம் இங்கு.
குருவின் பார்வை உங்கள் மேல் பட்டுவிட்டால், அவர் அள்ளி அள்ளி கொடுப்பார் தெரியுமா? வியாழ பகவான் அல்லது பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் இவர் தேவர்களின் தலைவராவார். நவக் கிரகங்களிலேயே பூரண நல சுப எண்ணம் பெற்றவர் இவராவார். குருப் பெயர்ச்சி முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், குருவின் பார்வையால் வரும் நாட்களில் இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை, புகழ்மாலை என கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம். 

திருமணம் நடந்து பல நாட்களாக வீட்டில் குழந்தை சத்தம் கேட்கவில்லை என்றால் அப்படி இப்படி அக்கம்பக்கத்தினர் பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஏன் நம் சொந்தக்காரர்களே காது மூக்கு வைத்து பேசிக்கொள்வார்கள். அதை கேட்கும் நமக்குத்தான் நரக வேதனை. அதனால் குடும்ப பிரச்சனை என தீராத குழப்பங்களால் சிதறுண்டு போகின்றன குடும்பங்கள். அது குருவின் வேலைதான்.
எந்த ராசிக்காரர்களுக்கு எந்த கோயிலுக்கு சென்றால் அது நலம்... தோசக்காரர்கள் எங்கு சென்றால் தோசம் கழியும் என்பவற்றை இந்த பதிவில் காணலாம். 

 மேஷம், மிதுனம், கும்பம்

மேஷம், மிதுனம், கும்பம்

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு குரு அப்படித்தான் கொடுக்கப்போகிறார். ஆனாலும் உங்கள் பலனை முழுமையாக அடைய சில கோயில்களுக்கு சென்றுவரவேண்டும்.

 பாடி திருவலிதாயம்

பாடி திருவலிதாயம்

சென்னை அருகில் பாடியில் உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பாடி கோயில். ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் எளிதாக சென்றடையலாம்.

 தென் திட்டை

தென் திட்டை

ராஜகுரு திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

 பலன்கள்

பலன்கள்

லட்சார்ச்சனை குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 குருவித்துறை குரு

குருவித்துறை குரு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மதுரையிலிருந்து கிட்டத்தட்ட மேற்கு திசையில் 35 கிமீக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது இந்த தலம். மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்ற தலம் இதுவாகும்.

 கடுமையாக பாதிக்கப்பட போகும் அந்த நான்கு ராசிகள்

இந்த குருப் பெயர்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை. குரு பார்வை இனி வரும் வருடங்களில் உங்கள் மேல் விழும். இந்த வருடத்துக்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் குரு பகவானிடம் சென்றுவருவதுதான். வாருங்கள் உங்களுக்கான கோயில்களையும் காணலாம்.
ரிஷிபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களும் மிகவும் துரதிஷ்டமான செய்தி இது. இந்த வருடம் குரு உங்களுக்கு பெரிதாக எந்த மகிழ்ச்சியையும் தரப்போவதில்லை. ஆனால் நம்புங்கள் கூடியவிரைவில் உங்கள் கவலைகள் நீங்கும். உடல் நலத்தைப் பேணுங்கள். குருவை நாடுங்கள்.

பொதுவாகவே மரணத்தின் குறியீடு என்பது ஒரு நாட்டின் தோல்விக்கான அடையாளமாகும். பழங்கால மன்னராட்சிகளில் மரணத்தின் குறியீடுகளால்தான் ஆட்சியையே இழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

 ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயம்

ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் ஆலயம்

நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
Rasnaboy

 தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

இத்தலத்துச் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான். வடக்குத் திசை குருவிற்கு உரியது.

 திருச்செந்தூர்

திருச்செந்தூர்

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.
Ssriram mt

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி வழியாகவும், அல்லது நேரடியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்தும் திருச்செந்தூரை வந்தடையலாம். அல்லது திருநெல்வேலியிலிருந்து தொடர்வண்டியிலும் வரலாம்.

 ஆழ்வார்திருநகரி

ஆழ்வார்திருநகரி

இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

 எங்குள்ளது?

எங்குள்ளது?

108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.

 கிழக்கு நோக்கிய குரு பட்டமங்கலம்

கிழக்கு நோக்கிய குரு பட்டமங்கலம்

கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம்.

 எங்குள்ளது?

எங்குள்ளது?

காரைக்குடியிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம் உள்ள பட்டமங்கலம். இது சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்ததாகும்.

 திருவொற்றியூர்

திருவொற்றியூர்

தட்சிணாமூர்த்தி கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும் உள்ளது. இச்சிலையின் கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது. குரு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் நடக்கும்

 எங்குள்ளது

எங்குள்ளது

திருவொற்றியூர் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தியாகராய நகரிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

 அகரம் கோவிந்தவாடி

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

 தக்கோலம்

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

குரு பரிகார தலங்கள்

குரு பரிகார தலங்கள்

குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் இந்த சிறப்பு யாகங்களில் பங்கேற்கலாம். குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானாது.

வியாழக்கிழமையில் விரதம்

வியாழக்கிழமையில் விரதம்

வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு வணங்கவேண்டும் குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும்.

வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு வணங்கவேண்டும் குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறு

நேரமும் காலமும்

நேரமும் காலமும்

ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயத்தில், குருப்பெயர்ச்சிக்கான லட்சார்ச்சனை விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி முதல்கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக அக்டோபர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். இதேபோல குருபகவான் பரிகார தலங்களில் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. உங்களுக்கு அருகில் உள்ள குருபரிகார தலங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.

Post Top Ad