அறிவியல்-அறிவோம் - பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 27, 2018

அறிவியல்-அறிவோம் - பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும்?


பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் இரவு பகல் மற்றும் வானிலை மாற்றம் ஆகியவை நிகழ்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஒரு வேளை பூமியின் சுழற்சி நிற்கும் பட்சத்தில் என்னென்ன மாற்றங்கள் விளைவுகள் ஏற்படும் என்பதனை நாம் இதுவரை கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம். அப்படி நிற்கும் பட்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விளைவுகளை என்னென்ன என்பதனை தற்போது பார்க்கலாம். 


 நம்மை சுற்றி பூமியுடன் இணைந்து இருக்கும் பொருட்கள் அனைத்தும் ஒரு மணிநேரத்திற்கு 1000 கிலோமீட்டர் வேகத்திற்கு கிழக்கை நோக்கி பறக்க நேரிடலாம். அதுமட்டுமல்லாமல் பூயின் சுற்றுப்புறச்சூழலில் இருக்கும் காற்று கிட்டத்தட்ட அணு குண்டு வெடிப்பதைப் போன்று விளைவை ஏற்படுத்தும் அளவிற்கு வீசக்கூடும்.

இதனால் நிமிடத்திற்கு 17 மைல் தொலைவிற்கு ஆழிப்பேரலைகள் என்று அழைக்கப்படும் சுனாமி நிலப்பகுதியை தாக்கக்கூடும். பூமியின் சுழற்சி நின்றுவிடுவதால் தற்போது இருக்கக்கூடிய ஒராண்டு அதாவது 364 நாட்கள், நமக்கு ஒரு நாளாக அமையும். 

இதனால் பகல் பொழுது முழுவதும் அதாவது ஆறு மாத காலத்திற்கு அதீத வெப்பமும், இரவுப் பொழுது அதாவது அடுத்த ஆறு மாத காலத்திற்கு அதீத குளிரான சூழ்நிலையும் ஏற்படும். (ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இருள்)வருடத்திற்கு ஒரு முறை சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் நிலை உருவாகும். 


அதுமட்டுமில்லாமல் centrifugal force எனப்படும் மையவிலக்கு விசையால் பூமத்திய ரேகையில் நிலம் சிறிய அளவில் தொடர்ச்சியாக வீக்கமடைந்து காணப்படும். பின்னர் சிறிது காலத்திற்கு பின்னர் அந்த பகுதி மீண்டும் தட்டையாக மாறும் என்று கூறப்படுகிறது.

 மேலும் புவி ஈர்ப்பு விசை அதிகம் இருக்கக்கூடிய துருவ பகுதிகளை நோக்கி கடல் நகரும் என்றும் நிலப்பகுதி பூமத்திய ரேகை பகுதியில் ஒரே கண்டமாக ஒன்றாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.


இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் பூமியின் காந்த விசை சிறுக சிறுக வழுவிழந்து ஒரு கட்டத்தில் மறைந்து போகும் நிலை உருவாகும். இதன் விளைவாக காஸ்மிக் கதிர்கள் அதிக அளவில் பூமியை தாக்க கூடும் இதன் மூலம் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத சூழல் ஏற்பட்டு பூமி முற்றிலுமாக அழிந்து போகும் நிலை ஏற்படும்.

ஆகவே பூமி 24 மணிநேரமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அதனுடைய வேலையினை செய்தாக வேண்டியது உயிர்கள் வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்த உதவும் என்பது நிதர்சனமான உண்மை.

Post Top Ad