கல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் 10 ஆயுர்வேத முறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 26, 2018

கல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் 10 ஆயுர்வேத முறைகள்


மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே.

அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும். கல்லீரல் பிரச்சினையை முற்றிலும் தடுப்பதற்கு இயற்கை முறையிலான பாட்டி வைத்தியங்களை கையாளுவோம்.

மஞ்சள்

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் தினமும் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் கல்லீரலை சுத்தம் செய்யலாம்.



முளைக்கீரை

முளைக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் ஆகியவை அதிகம் இருப்பதால் அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

சீமைக் காட்டு முள்ளங்கி

சிறிது சீமை காட்டு முள்ளங்கி வேரை நீரில் போட்டு சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.


நெல்லி


தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே போதும் பல விதமான நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.

அதிமதுரம்

பல நோய்களுக்கு தீர்வு தரும் அதிமதுரம் டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் வரமால் தடுக்க முடியும்.


ஆளி விதைகள்

கல்லீரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் மர்றும் கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களை குறைக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன

இஞ்சி

இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும். எனவே, இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.


கிரீன் டீ

கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு அதிக காலம் இளமையாக இருக்கலாம்.மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகின்றன.

Post Top Ad