மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள் - Asiriyar.Net

Saturday, November 23, 2019

மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்






காய்கறி மற்றும் பழங்களில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் . ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது.


சோயா பொருட்கள் சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான்.இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம்.






Post Top Ad