TNPSC - குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 7, 2019

TNPSC - குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும்




டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும்  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பதவிகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் இளநிலை உதவியாளர், தட்டச்சர்,  கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.in அல்லது www.tnpsc.exams.net என்ற இணையதளங்களில் ஜூன் 14ம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பாடத்திட்டம் : மொத்தம் 200 கேள்வி (தமிழ் (அ)ஆங்கிலம்100, கணிதம் 25 பொது அறிவு 75) அனைத்து கேள்விகளும் 6 வகுப்பிலிருந்து 10 வகுப்புவரை உள்ள பள்ளி புத்தகத் தரத்திலே அமையும் கூடுதலாக நடப்பு நிகழ்வுகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.பாடத்திட்டம் பற்றிய குறிப்பேடு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் பார்க்கலாம்

Post Top Ad