'இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும் - அமைச்சர், செங்கோட்டையன் - Asiriyar.Net

Friday, June 7, 2019

'இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும் - அமைச்சர், செங்கோட்டையன்'இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு, வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள, கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய, 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று திறந்து வைத்தார்.பின், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:

தமிழக பள்ளி கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கல்விக்காக, தனி தொலைக்காட்சி துவங்கப்பட்டு, தற்போது, சோதனை ஓட்டம் நடக்கிறது.வரும், சட்டசபை கூட்டத் தொடரில், இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

புள்ளி விபரங்கள் கிடைத்தபின், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற, அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து அறிவிக்கப்படும்.'வெயிட்டேஜ்' முறையால், பணி வாய்ப்பை இழந்தோர் மற்றும் 2013 - 14ல், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என, 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும், பணி வழங்கும் நிலையில், அரசு இல்லை.மாணவர் சேர்க்கை அதிகரித்தால் தான், பணி வாய்ப்பு வழங்கப்படும். இந்தாண்டு, இரண்டு லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதுபோல், ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கையை பொறுத்து, மதிப்பெண் அடிப்படையில், பணி வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Post Top Ad