
Ensuring that teachers are able to teach with full dedication and at full
capacity - no non-teaching activities: There must be no interruption to school
schedules so that teachers can use their work time to concentrate solely on and
excel at their chosen professions.
Aside from the minimal Supreme Court directives related to election duty and conducting surveys, teachers will not be requested nor allowed to participate in any non-teaching activities during school hours that affect their capacities as teachers - e.g. cooking midday meals, participating in vaccination campaigns, procuring school supplies, or any other time-consuming administrative assignments. For any non-teaching jobs at schools, staff must be deployed as needed and shared across the school complex. Teachers in turn will be held accountable for being absent from school without cause or without being on
approved leave."
கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடாமல் அர்ப்பணிப்புடனும் முழுமையாகவும் கற்பிப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் கற்றல் கற்பித்தல் சார்ந்த பணிகளில் நேரத்தை முழுமையாக கவனம் செலுத்துவதற்கு எந்தவித இடையூறுகளுக்கும் இடமளிக்கக் கூடாது. இதனால் அவர்களது தொழில்திறன் மேம்படும்.
தேர்தல் மற்றும் தேசிய கணக்கெடுப்புப் பணிகள் தொடர்பான குறைந்தபட்ச பணிகள் சார்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவுகள் தவிர, பள்ளி நேரங்களில் பிற பணிகளுக்கு ஆசிரியர்கள் கோரப்படவதும் அனுமதிக்கப்படுவதும் சரியல்ல. இவற்றால் ஆசிரியர்களின் தனித்திறமைகள் பாதிக்கக் கூடும். காட்டாக, மதிய உணவு வழங்குதல், தடுப்பூசி பரப்புரைகளில் பங்களிக்க வைத்தல், பள்ளி விநியோகங்களில் ஈடுபடுத்துதல், நிர்வாகப் பணிகளில் ஏனைய நேரங்களைச் செலவிடுதல் போன்றவை. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள தேவைக்கேற்ப ஆசிரியர் அல்லாத ஊழியர்களைப் பள்ளிகளில் கட்டாயமாக நியமனம் செய்து கொள்வதும் பிற ஆட்களைக் கொண்டு முடிப்பதும் இன்றியமையாதது. பள்ளிக்கு வருகை புரிவதில் முன்தகவல் அளிக்காமல் வாராதிருப்பதும் அனுமதிக்கப்படாத விடுப்பில் இருப்பதும் முறையல்ல என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.