10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 1, 2019

10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்





வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் சில இடங்களில் குறைந்துள்ளது.  இதுவரை வெயில் கடுமை காட்டிய இடங்களான வேலூர், திருத்தணியில் நேற்று 108 டிகிரி வெயில் நிலவியது. மதுரை, கடலூர் 104 டிகிரி, திருச்சி, சேலம், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, சென்னை 102 டிகிரி வெயில் நிலவியது. பிற  இடங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.


அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 60 மிமீ மழை பெய்துள்ளது. ஒசூர், போச்சம்பள்ளி 50 மிமீ,  கரூர், வேம்பாவூர் 30 மிமீ, தர்மபுரி, கொடுமுடி, பெரம்பலூர், கோபிச்செட்டிப்பாளையம், கரூர் பரமத்தி, சத்தியமங்கலம் 20 மிமீ மழை பெய்துள்ளது.  இந்நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் நீடிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் கூடுதலாக 4  டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad