குழந்தைகள் தனியறையில் தூங்குவது அவர்களின் மன வளர்ச்சிக்கு நல்லதா..? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 6, 2019

குழந்தைகள் தனியறையில் தூங்குவது அவர்களின் மன வளர்ச்சிக்கு நல்லதா..?




குழந்தைகள் தனியறையில் தூங்குவதை ‘பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது.

குழந்தை அதிகச் சிரமமில்லாமல் வளர வேண்டும் என்பதற்காகத் தனியறை ஒதுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பக் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை தங்களுடன் ஒரே அறையில் படுக்கவைத்துக்கொள்ளும் பெற்றோரும் இருக்கிறார்கள்.

குழந்தைகள் தனியாகப் படுத்தால் நல்லதல்ல, தனியறையில் இருப்பதால் அவர்கள் தனித்துவிடப்படுவார்கள் என்கிற கூற்றும் உண்மையல்ல. ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு குழந்தைகளைத் தனித்துவிடுவதுதான் பிரச்சனை. 

குழந்தைகளுடன் பெற்றோர்கள் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும்.


தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள்  அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும், ‘பாதுகாப்பு  உணர்வுடன்’ இருக்க வேண்டும். 


குழந்தை தன் பிரச்சனைகள் குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்குப் பிரச்சனை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான்  இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் வழி தவறலாம். அதிலிருந்து அவர்களை மீட்டு, சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

Post Top Ad