அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர் - Asiriyar.Net

Wednesday, March 27, 2019

அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்





பேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படித்து டாக்டரான முன்னாள் மாணவர், அதே பள்ளியை தத்தெடுத்து உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை படித்த நீலகண்டன், 42, என்பவர், மருத்துவம் படித்து, அரசு மருத்துவராக பணியாற்றி, தற்போது தனியாக கிளினிக் வைத்துள்ளார்.எலும்பு முறிவு மருத்துவரான அவர், தான் படித்த ஆரம்பப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். அவரது மனைவி புவனேஸ்வரி ஒத்துழைப்புடன், பள்ளியைத் தத்தெடுத்து, 2 லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் வகுப்பறை, மேசை, நாற்காலி, புத்தகங்களை வைக்க அலமாரி, கம்ப்யூட்டர் ஆகிய வற்றை வழங்கி உள்ளார். வரும் ஆண்டுகளில், வகுப்பறைகளை சீரமைத்து தருவதாக தெரிவித்துள்ளார்.

Post Top Ad