ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி? - Asiriyar.Net

Tuesday, October 2, 2018

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி?




ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி புதிய அம்சத்தை கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எத்தனை நேரம் அவற்றைபயன்படுத்தினோம் என்பதை பார்க்க முடியும். இதற்கான அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்t மற்றும் இன்ஸ்டாகிராமில் இதற்கான அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. இதனை எவ்வறு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்


ஃபேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி
:
1 - ஃபேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.

2 - செட்டிங்ஸ் பக்கம் செல்ல வேண்டும்.

3 - ஃபேஸ்புக்கில் உள்ளYour Time ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்





4 - குறிப்பிட்ட சாதனத்தில் உங்களது ஃபேஸ்புக் பயன்பாடு அட்டவணை வடிவில் வெளியிடப்படுகின்றன.

5 - இங்கு இருக்கும் எந்த பாரை க்ளிக் செய்தாலும் குறிப்பட்ட நாளில் நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதை பார்க்க முடியும்.

6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால்t, நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.


இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி:


1 - இன்ஸ்டாகிராம் செயலியை திறக்க வேண்டும்.

2 - செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

3 - இனி Your Activity ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - ஃபேஸ்புக் போன்றேt, இங்கு நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் உங்களது பயன்பாட்டை விவரிக்கும் அட்டவணை காணப்படும்.

5 - இனி திரையில் உள்ள ஏதேனும் ஒரு பாரை க்ளிக் செய்து ஒரு நாளுக்கான விவரங்களை செட் செய்து கொள்ளலாம்.

6 - உங்களுக்கு வேண்டுமெனில், தினமும் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து கொண்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.


டேப்லெட் அல்லது டெஸ்க்டாப்
இந்த அம்சம் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் குறிப்பிட்ட செயலியை எவ்வளவு நேரம்t பயன்படுத்தினீர்கள் என்பதை மட்டுமே காண்பிக்கும். இது மொத்தத்தில் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது டெஸ்க்டாப் போன்றவற்றில் நீங்கள் எவ்வளவு நேரம் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமை பயன்படுத்தினீர்கள் என்பதை காண்பிக்காது.




நோட்டிஃபிகேஷன்ஸ்
இதைத் தொடர்ந்து விரைவில் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கு அனுப்பப்படும் நோட்டிஃபிகேஷன்களின் எண்ணிக்கையை தேர்வு செய்யப்பட்ட காலத்திற்கு மட்டும் குறைக்கும்.

Post Top Ad