மறுநாள் முதல், தேர்வுக்கு பிந்தைய விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்க உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் மற்றும், இரண்டாவது ஜோடி சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவும், இன்று கொண்டாடப்பட உள்ளது.