சமையல் கியாஸ் விலை ரூ.59 உயர்வு! - Asiriyar.Net

Monday, October 1, 2018

சமையல் கியாஸ் விலை ரூ.59 உயர்வு!





சமையல் கியாஸ் விலை இன்று முதல் ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வின் காரணமாக, பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது சமையல் கியாசின் விலையும் உயர்ந்துள்ளது.
இதன்மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் 2 ரூபாய் 89 காசு உயர்ந்துள்ளது. இன்று முதல் பதிவு செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மானிய தொகையாக சிலிண்டர் வழங்குவோரின் வங்கி கணக்கில் ரூ.376.60 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் (செப்டம்பர்) வரை இந்த மானியத்தொகை ரூ.320.49 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மானியம் இல்லாமல் வர்த்தக ரீதியில் விற்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.59 உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Post Top Ad